குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சீரமைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி, பகுதி அளவிலான கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பை நிகழ்த்தினார். குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆன நிலையில், கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை காங்கிரஸ் மேலிடம் தொடங்கியுள்ளது.