வடமாநிலங்களில் நிலவும் கடுங்குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் இரவு நேரங்களில் வெப்பநிலை குறைந்து கொண்டே செல்வதால் வீடற்ற மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.தனால் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தற்காலிக முகாம்களை நோக்கி அவர்கள் படையெடுக்கின்றனர்.