அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மீண்டும் நேரடி விமானப் போக்குவரத்தை தொடங்குவது தொடர்பாக துருக்கியில் இருநாடுகளும் ஆலோசனை நடத்தின. இது குறித்து ரஷ்யா வெளியிட்ட அறிக்கையில், ரஷ்யா மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் இடையே இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், அந்தப் பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமானதாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.