மொபைல் போன் உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரியில் சலுகை வழங்கப்படும் என மத்திய மறைமுக வரிகள் விதிப்பு வாரியம் தெரிவித்துள்ளது. உதிரிபாகங்களை இறக்குமதி செய்வோர் யாராக இருந்தாலும் MOOWR திட்டத்தின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் இறக்குமதி வரிச்சலுகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால், மொபைல் போன்களின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.