தனது மகள் பவதாரணியின் பெயரில், சிறுமிகள் அடங்கிய இசைக்குழுவை தொடங்க உள்ளதாக இளையராஜா அறிவித்துள்ளார். "பவதாரணி தன்னிடம் பெண்கள் மட்டுமே அடங்கிய இசைக்குழுவை தொடங்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததாகவும், அவர் கடைசியாக விருப்பப்பட்ட விஷயம் அதுதான் எனவும் தெரிவித்துள்ள இளையராஜா, அவர் ஆசைப்பட்டது போல், 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மட்டுமே அடங்கிய ஒரு இசைக்குழுவை தொடங்கப் போவதாக தெரிவித்துள்ளார்.