தாம் சிறந்த கிரிக்கெட் விளையாடினால், மக்கள் தொடர்புக்கான PR தேவையில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில், தன்னுடைய மேலாளர்கள் அடிக்கடி மக்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள சமூக வலைத்தளங்களை பயன்படுத்திக் கொள்ள பரிந்துரைத்ததாகவும், ஆனால் அதில் இருந்து தாம் விலகியே இருந்ததாகவும் தெரிவித்தார்.