புதுச்சேரியில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ராமதாஸ் பாமகவை ஆரம்பித்தவன் நான் தான் என்றும் நான் சொல்வதை கேட்டால் கட்சியில் இருக்கலாம் எனவும் ஆவேசமாக கூறினார். மேலும் சொல்வதை கேட்க விருப்பமில்லை என்றால் கட்சியில் இருந்து வெளியேறலாம் என ராமதாஸ் கூறியதால் அங்கிருந்தவர்கள் செய்வதறியாது நின்றனர்.