மதுவை ஒழிக்க முடியாவிட்டால் தோல்வியை ஒப்புக் கொண்டு பதவி விலகும்படி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்த அறிக்கையில், தேசிய அளவில் சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே மதுவிலக்கு சாத்தியமாகும் என்று அமைச்சர் ரகுபதி கூறியிருப்பது, மது ஆலை அதிபர்கள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் பேசுவதை போல உள்ளதாக விமர்சனம் செய்துள்ளார். மேலும், மதுவிலக்கு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குடிகாரர்களை விட அதிக தள்ளாட்டத்தில் உள்ளதாகவும், மக்கள் நலனுக்காக மதுவிலக்கு கேட்டாலும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரினாலும் மத்திய அரசை கேளுங்கள் என்பது மக்களை முட்டாள்களாக நினைத்து ஏமாற்றும் செயல்கள் என்றும் விமர்சனம் செய்துள்ளார்.