தொகுதி மறுவரையறை தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மறு வரை செய்யப்படுவதாக இருந்தால் 7.2 சதவிகிதம் என்ற விகிதாச்சாரத்தை கடைபிடிக்க வேண்டும் என்றார். அதாவது இப்போதுள்ள 543 மக்களவை தொகுதிகளில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் என்பது மொத்த தொகுதிகளில் 7.2 சதவிகிதமாகும். அதொகுதி மறுவரையறைக்குப்பின் இந்தியாவிலுள்ள மொத்த மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 848ஆக உயரும் பட்சத்தில் தமிழ்நாட்டுக்கு மொத்த தொகுதிகளான 848 தொகுதிகளில் 7.2 சதவிகிதமான 61 தொகுதிகளாக கிடைக்கப்பட வேண்டும். அதாவது தற்போதுள்ள தொகுதிகளில் இருந்து 22 தொகுதிகள் அதிகமாக கிடைக்க வேண்டும் என்பதே சரியான மறுசீரமைப்பாக இருக்கும் என்று கூறினார்.