சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது, இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு டிராவிட், கம்பீர் , சேவாக், அஸ்வின், கோலி ஆகியோர் இந்த விருதை வென்றுள்ள நிலையில், சிறந்த டெஸ்ட் விருதை வென்ற ஆறாவது இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார்.