சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெற்றிக்கரமாக நடத்தியதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஐசிசி நன்றி தெரிவித்துள்ளது. துபாயில் நடைபெற்ற 5 போட்டிகளுக்காகவும், அமீரகம் கிரிக்கெட் வாரியத்திற்கும் ஐசிசி நன்றி தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 19ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை நடைபெற்ற இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர், 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தானில் நடைபெற்ற முதல் சர்வதேச கிரிக்கெட் தொடராகும். இந்த தொடரில் நடைபெற்ற போட்டிகள் பாகிஸ்தானில் கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டி மற்றும் இந்தியாவுக்காக யுஏஇ-ல் உள்ள துபாய் ஆகிய நான்கு மைதானங்களில் நடத்தப்பட்டது.