ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மாற்றமின்றி முதலிடத்தில் தொடரும் நிலையில், இந்தியாவின் ஜெய்ஸ்வால் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆனால் நட்சத்திர வீரர் விராட் கோலி 8-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.