ஐ.சி.சி. ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிமுறை மாற்றம், ஆட்டத்தின் நீண்ட கால முன்னேற்றத்துக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து, ஐ.சி.சி.க்கு இந்த கமிட்டி பரிந்துரைகளை வழங்கும்