அமெரிக்காவில் இருந்தாலும் தமிழ் மண்ணில் இருப்பதை போன்று உணர்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர், சிகாகோவில் பிரமாண்டமாக நடைபெற்ற தமிழர் கலை விழாவில் பங்கேற்றார்.விழாவில் பட்டு வேட்டி, பட்டு சட்டையுடன் கலந்துகொண்ட அவர், தனித்தனி தாய் வயிற்றில் பிறந்தாலும் நாம் அனைவரும் உடன்பிறப்புகளே என உணர்ச்சிவசப்பட்டு உரையாற்றினார்.