செந்தில் பாலாஜிக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பதற்காக காட்டிய வேகத்தை மக்கள் நலத் திட்டங்களில் காட்டி இருக்கிறார்களா? என திமுகவை அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரை மாவட்டம் டி.குன்னத்தூரில் தொண்டர்களிடம் உரையாற்றிய அவர், திமுகவினர் யாருக்கும் திராவிட மாடல் என்றால் என்னவென்றே தெரியாது, ஆனால் திராவிட மாடல் என சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள் என கடுமையாக சாடினார்.