திருமணத்தில் நம்பிக்கை இல்லை என நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், நீண்ட யோசனைக்குப் பிறகு தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார். தன்னை சுற்றியுள்ள நட்பு வட்டாரத்தில் திருமணம் செய்து கொண்டவர்கள் யாருமே நிம்மதியாக இல்லை என்றும் ஒரு சிலர் மட்டுமே உண்மையிலேயே மகிழ்ச்சியாக உள்ளதாகவும் ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்தார்.