மதுரை மாநாட்டில், RAMP WALK செல்லும் போது, தொண்டர்களுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோவை பகிர்ந்துள்ளார் தவெக தலைவர் விஜய். மதுரையில் நடைபெற்ற தவெக 2ஆவது மாநில மாநாட்டில், ‛ரேம்ப் வாக்' செய்த விஜய், ஆர்ப்பரித்த தொண்டர்களுடன் சேர்ந்து ‛செல்பி' எடுத்தார். இந்த வீடியோவை விஜய், தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், விஜய் தனது தலையில் கட்சி கொடியை கட்டி உள்ளார். தோளிலும் கட்சி கொடியை அணிந்தபடி தொண்டர்களுடன் சிரித்தபடி செல்பி வீடியோ எடுக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவின் பதிவில் ஒரு ‛கேப்ஷன்' எழுதி உள்ளார். அதில், உங்க விஜய் உங்க விஜய் உயிரென வர்றேன் நான்உங்க விஜய் உங்க விஜய் எளியவன் குரல் நான்உங்க விஜய் உங்க விஜய் தனி ஆள் இல்ல கடல் நான்இவ்வாறு விஜய் குறிப்பிட்டுள்ளார். இந்த வரிகள் மாநாட்டில் வெளியிடப்பட்ட தவெக கட்சி பாடலாகும். இந்த பாடலின் நடுப்பகுதியில் விஜய் பாடியிருப்பார். இந்த வரியை தான் நடிகர் விஜய் இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.