சீக்கிரம் என்னை ஜெயிலுக்கு அனுப்புங்க அங்க போய் பால் ஊத்துற வேலை பாக்கி இருக்குது என்று சொல்லி 18 வது முறையாக ஹப்பியாக சிறைக்கு சென்றுள்ளார், பால்கார செந்தில் .கோவை மாவட்டம் சூலூர் பீடம் பள்ளி பகுதியில் புவனேஸ்வரி என்பவரது, வீட்டில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் பீரோவில் இருந்த ஐந்து பவுன் தங்க நகைகளை மர்ம நபர் திருடி சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வந்ததுள்ளனர். இந்நிலையில் போலீசார் சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை வைத்து ஆய்வு செய்து வந்த நிலையில் குற்றவாளி யார் என்பதை உறுதி செய்தனர்.இதனையடுத்து அவரை கைது செய்வதற்காக காத்திருந்த நிலையில் விட்டை உடைத்து திருடிய சம்பவத்தில் ஈடுப்பட்டது. வெல்லமடையை சேர்ந்த பிரபல திருடன் என்பதும் இவர் தொடர் திருட்டு செயல்களில் ஈடுப்பட்டு வந்த செந்தில் என்பது போலீசாரின் விசாரணையில் உறுதியானது.மேலும் இவர் இதுபோன்ற சம்பவத்தில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்டு சிறையில் இருப்பது தெரிய வந்தது. ஜெயிலில் இருக்கும் போது வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டால் அவரிடமிருந்து திருட்டு பொருட்களை மீட்பதில் சிரமம் ஏற்படும் என்று காத்திருந்த போலீசார். சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்து சூலூர் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த செந்திலை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். பிறகு விசாரணை நடத்திய போலீசார் என்ன தொழில் செய்து வருகிறாய் நீ என்ன பால் வியாபாரம் செய்கிறாயா என கேட்டுள்ளனர். அதற்கு அந்த திருடன் செந்தில் கூறிய பதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.கைது செய்யப்பட்ட செந்தில் 18 முறை வீட்டை உடைத்து திருடிய வழக்குகளில் சிறைக்கு சென்றுள்ளார் ,அதில் முதல் முறையாக போலீசாரல் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றபோது சிறையில் இருந்த அதிகாரிகள் உனக்கு என்ன வேலை தெரியும் என கேட்கவே எந்த வேலையும் தெரியாது என கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து சிறையில் உள்ள கைதிகளுக்கு தினந்தோறும் குடிப்பதற்கு பால் ஊற்றும் பணியை கொடுத்துள்ளனர்.இதனால் இவரை பால்கார செந்தில் என சிறையில் உள்ளவர்கள் செல்லமாக அழைக்க தொடங்கியுள்ளனர். இந்த வேலையை அவர் மிகவும் சின்சியராக செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து செந்தில் சிறையிலிருந்து ஜாமனில் வெளியே வந்து மீண்டும் ஒரு திருட்டு வழக்கில் சிறை சென்றபோது அவருக்கு மீண்டும் பால் கொடுக்கும் வேலையை கொடுத்துள்ளனர்.தொடர்ந்து 17 முறை சிறை சென்றபோதும் சிறையில் அவருக்கு பால் ஊற்றும் பணியை மட்டுமே கொடுத்து வருவதால் திருடன் என்ற அச்சம் போய்விட்டது சிறைக்கு சென்றால் பால் ஊத்தும் பணி செய்கிறோம் . இடையில் வந்தால் திருடி ஜாலியா இருக்கலாம் என்ற மனப்பக்குவத்துக்கு ஆளாகிவிட்டதை கண்டு இதுபோன்ற நபரின் பதிலால் போலீசார் சிரிப்பதா அழுவதா என தெரியாமல் இருந்துள்ளனர்.சாதாரணமாக இரண்டு மூன்று திருட்டு சம்பவங்களுக்கு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து ஆண்டு கணக்கில் சிறை வைக்கும் சட்ட பிரிவுகள் உள்ள நிலையில், தொடர்ந்து 18 வது முறையாக வீடு உடைத்து திருடி சிரித்துக்கொண்டே ஜெயிலுக்கு போகும் இதுபோன்ற பால்கார செந்தில்களை வளர விடுவது சமுதாயத்துக்கு நல்லதா என போலீசார் தங்களுக்கு தாங்களே கேள்வி கேட்டுக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.