மருத்துவமனையில் இருந்த படி அரசுப் பணிகளை தொடர்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மக்கள் அளித்த மனுக்கள் மீது தீர்வு காண்பதில் எந்தவிதமான தொய்வும் ஏற்படக் கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.