ஹூண்டாய் நிறுவனம் தனது i20 N லைன் மாடல் காரின் விலையை திடீரென உயர்த்தியுள்ளது. என்ட்ரி லெவல் N6 MT மற்றும் N6 MT டூயல்-டோன் வேரியண்ட்களின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை. மற்ற வேரியண்ட்களின் விலையில் 4 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதனால் காரின் ஆரம்ப விலை 9 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.