குறைபாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டதை தொடர்ந்து ஒரு லட்சத்து 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் வாகனங்களை திரும்பப் பெற பிரபல ஹுண்டாய் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஹுண்டாய் நிறுவனம் சமீபத்தில் அமெரிக்காவில் தனது எலக்ட்ரிக் வாகன விற்பனையை தொடங்கியது. ஆனால் ஒருங்கிணைந்த சார்ஜிங் கண்ட்ரோல் யூனிட்கள் சேதமடைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் இதன் மூலம், கார் பேட்டரி சார்ஜ் செய்வது நிறுத்தப்பட்டு, டிரைவ் பவரை இழக்க நேரிடும் என அமெரிக்க மோட்டார் பாதுகாப்பு ரெகுலேட்டர் அமைப்பு கூறியதை தொடர்ந்து ஹுண்டாய் நிறுவனம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.