குறைந்த விலையில் புதிய எக்ஸ்டர் EX CNG வேரியன்ட் மாடல் காரை ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை ஏழரை லட்சம் ஆகும். ஏற்கனவே இந்த எஸ்யூவி மாடலில் S, S+ மற்றும் SX வேரியன்ட்டுகளில் CNG மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. புதிய மாடல் கார் பெட்ரோலில் இயங்கும் போது லிட்டருக்கு19.4 கிலோ மீட்டரும், CNG எரிபொருளில் இயங்கும் போது கிலோவுக்கு 27.1 கிலோ மீட்டரும் மைலேஜ் கொடுக்க வல்லது.