ஹைதராபாத்தில் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டதாக கூறி அடுக்குமாடி கட்டிடம் தகர்க்கப்பட்டது. HYDRA என்ற பேரிடர் மீட்பு, சொத்து கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் ஹைதராபாத்தில் சட்டவிரோதமாகவும், அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் சுன்னம் செருவு பகுதியில் தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடத்தை ராட்சத இயந்திரம் மூலம் அகற்றினர்.