கணவர், தூக்கத்திலேயே உயிரிழந்துவிட்டதாக கூறி, ஒப்பாரி வைத்த மனைவி. போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டால் வெளிவந்த பகீர் உண்மை. கழுத்தை நெரித்து துடிக்க துடிக்க கொன்றுவிட்டு மனைவி கபட நாடகம். யாருக்கும் சந்தேகம் வராதபடி அழுது புரண்டு நாடகமாடியும் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது எப்படி? நடந்தது என்ன?"எனது கணவர் சுதிர் ரெட்டி திடீரென உயிரிழந்துவிட்டார்"நைட்டு சாப்பிட்டு தூங்குன கணவர், காலையில எழுந்துருக்கவே இல்ல, தூக்கத்துலேயே உயிரிழந்துட்டாருன்னு மனைவி பிரசன்னா சொந்தக்காரங்க கிட்ட சொல்லி அழுதுருக்காங்க. வாழ வேண்டிய வயசுல சுதிர் ரெட்டி உயிரிழந்தத நினச்சு, மொத்த உறவுகளும் துடிதுடிச்சு போய் நின்னுட்டு இருந்தாங்க. அப்போதான், உயிரிழந்த சுதிர் ரெட்டியோட சகோதரர் கண்ணுக்கு, தன் அண்ணன் உடம்புல அங்க அங்க காயங்கள் இருக்குறது தென்பட்ருக்குது. இதுல ஏதோ வில்லங்கம் இருக்குங்குறத புரிஞ்சிக்கிட்டவரு, தன்னோட அண்ணன் மரணத்துல மர்மம் இருக்குறதா போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் கொடுத்திருக்காரு.போலீசார் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்சடலத்த புதைக்கவோ எரிக்கிறதுக்கோ முன்னாடி போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பனும்ங்குறதுக்காக போலீஸ் வேக வேகமா சம்பவ இடத்துக்கு போனாங்க. உண்மையிலேயே உங்க கணவருக்கு என்னாச்சுன்னு கேட்டு போலீஸ், சுதிர் ரெட்டியோட மனைவி பிரசன்னாகிட்ட கிடுக்குப்பிடி விசாரணை பண்ணாங்க. அதேநேரம், அவரோட சடலத்தையும் மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்ச காவலர்கள் புலன் விசாரணைய தொடங்குனாங்க. அதுலதான், சுதிர்ரெட்டிக்கு நடந்த கொடூர சம்பவமே வெளிச்சத்துக்கு வந்துச்சு. இதுக்கு நடுவுல போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல, சுதிர யாரோ அடிச்சு காயப்படுத்துனது மட்டுமில்லாம, துப்பட்டாவல கழுத்த நெரிச்சிருக்காங்க, அதுலதான் அவரோட உயிர் போயிருக்குன்னு தெள்ள தெளிவா குறிப்பிட்டுருந்துச்சு. அத பாத்த மொத்த குடும்பமே ஒரு நிமிஷம் ஷாக்காகி நின்னுருக்காங்க. பிரசன்னாவுக்கு வேறொரு நபருடன் ஏற்பட்ட பழக்கம்தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்ல உள்ள குகட்பள்ளி பகுதிய சேர்ந்தவரு சுதிர் ரெட்டி. அங்க உள்ள பிரைவேட் கம்பெனில வேலை பாத்துட்டு இருந்த இவருக்கும், பிரசன்னாவுக்கும் கடந்த 15 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் நடந்திருக்கு. இந்த தம்பதிக்கு ஒன்பது வயசுல ஒரு மகன் இருக்கான். பிரசன்னா, தன்னோட வீட்டு பக்கத்துலேயே சின்ன அளவுல மளிகை கடை நடத்திட்டு வந்திருக்காங்க. தெருத் தெருவா போய் உணவு பொருள் விற்பனை செஞ்சுட்டு இருந்த இளைஞன் ஒருத்தன், பிரசன்னா கடை நடத்திட்டு வர ஏரியாவுக்கு அடிக்கடி போய்ருக்கான். அப்போ, ரெண்டு பேருக்கும் இடையில பழக்கம் ஏற்பட்டிருக்கு. பிரசன்னாவின் தகாத உறவை அறிந்து ஆத்திரமடைந்த சுதிர்இந்த பழக்கம் நாளடைவுல திருமணத்த மீறுன உறவா மாறிருக்கு. சுதிர் ரெட்டி வேலைக்கு போன நேரம் பாத்து, அந்த இளைஞன் அடிக்கடி பிரசன்னாவோட வீட்டுக்கு வந்திருக்கான். இத பாத்து அக்கம் பக்கத்துல உள்ளவங்க சுதிர் கிட்ட சொல்லிருக்காங்க. விஷயத்த கேட்டு கடுப்பான சுதிர், தன்னோட மனைவிய கண்டிச்சிருக்காரு. ஆனா, அதுக்கப்புறமும் பிரசன்னா தன்னோட தகாத உறவ கைவிடாம தொடர்ந்துட்டே இருந்துருக்காங்க. இவ்வளவு சொல்லியும் திருந்தாம உன் இஷ்டத்துக்கு பண்றயானு சுதிர், மனைவிய அடிச்சிருக்காரு. இனிமே நீ கடைக்கே போக வேண்டாம், கடைய வேற யாருக்காவது வாடகைக்கு விட்ருவோம்னு சொன்னதோட, மனைவியோட செல்போனையும் வாங்கி வச்சிக்கிட்டாரு. ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொல்ல திட்டம்சுதிர் இவ்வளவு கட்டுப்பாடுகள் விதிச்சதால கடுப்பான பிரசன்னா, தன்னோட காதலன்கூட சேர்ந்து கணவன கொல்ல பிளான் பண்ணிருக்காங்க. இதுக்காக, ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்து, கூலிப்படைக்கு பணமும் கொடுத்திருக்காங்க. பிளான்படி, நைட்டு 12 மணிக்கு, பிரசன்னாவோட காதலன், கூலிப்படைய சேர்ந்த ரெண்டு பேர அவங்க வீட்டுக்கு கூப்டு வந்திருக்கான். காதலன் கதவ லைட்டா தட்டுனதுமே சுதாரிச்சிக்கிட்ட பிரசன்னா, மெதுவா போய் கதவ திறந்து விட்டிருக்காங்க. அதுக்கப்புறம், அவன்கூட சேர்ந்து ஆழ்ந்து தூங்கிட்டு இருந்த கணவர் சுதிர கட்டையாலேயே அடிச்சிருக்காங்க. கணவன் துடிப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பிரசன்னாஅதுக்குப்பிறகு, கூலிப்படைய சேர்ந்த ரெண்டு பேரும், சுதிரோட கை, கால்கள இறுக்கமா பிடிச்சுருக்காங்க. பிரசன்னாவோட காதலன், வீட்டுல இருந்த துப்பட்டாவ எடுத்து, சுதிரோட கழுத்த இறுக்கி துடிக்க துடிக்க கொன்னுருக்கான். இதெல்லாத்தையும், கட்டிலுக்கு பக்கத்துலேயே நின்னு வேடிக்கை பாத்துட்டு இருந்துருக்காங்க மனைவி பிரசன்னா. அதுக்குப்பிறகு, கொலை பண்ணவங்க அங்க இருந்து போனதும், கணவர் சுதிர் தூக்கத்துலேயே உயிரிழந்துட்டதா சொல்லி அழுது நாடகமாடிருக்காங்க. விசாரணையில நடந்த எல்லாத்தையும் மனைவி பிரசன்னா ஒன்னுவிடாம சொல்லிட்டாங்க.பிரசன்னா, அவரது காதலனை கைது செய்த போலீசார்அதுக்கப்புறம், அவங்களோட காதலனும், கூட வந்த ரெண்டு பேரும் யாருன்னு கண்டுபிடிக்க, போலீஸ் 20-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள செக் பண்ணி பாத்தாங்க. அதுமட்டுமில்ல, சம்பவம் நடந்த நேரத்துல, சுதிர் வீட்டுல பதிவாகியிருந்த செல்போன் சிக்னல வச்சும் கொலையாளிகள தேடுனாங்க. அதன் அடிப்படையில, பிரசன்னாவோட காதலன கைது செஞ்ச காவல்துறையினர், மேலும் தலைமறைவா இருக்குற கூலிப்படைய சேர்ந்த ரெண்டு பேர தீவிரமா தேடிட்டு இருக்காங்க. தகாத உறவுனால நடக்குற கொலை சம்பவங்கள் அதிகரிச்சுட்டு வர நிலையில, கணவன இரவோட இரவா கள்ளக்காதலனோட சேர்ந்து துடிக்க துடிக்க கொன்ன சம்பவம், அந்த பகுதியில பெரும் பரபரப்ப ஏற்படுத்திருக்கு.இதையும் பாருங்கள் - 17 நாட்கள் குமரியில் மகள், தந்தை செய்த சம்பவம்