அமெரிக்காவின் ஃபுளோரிடாவிலுள்ள செமினோல் பகுதியை சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியதால் ஏற்பட்ட சேதங்களின் டிரோன் காட்சி வெளியாகியுள்ளது. செமினோலின் சில பகுதிகளை EF-2 சூறாவளி தாக்கியதால் பல்வேறு இடங்களில் மரங்கள் வேறோடு சாய்ந்த நிலையில் ஏராளமான வீடுகள் சுக்குநூறாக நொறுங்கின. இந்த சூறாவளியால் வீடுகளை இழந்த மக்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.