மில்டன் புயலால் கடும் சேதத்திற்குள்ளான அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் இயல்பு நிலைக்கு திரும்புகிறது. புளோரிடா மாகாணத்தை தாக்கிய மில்டன் புயலால் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்ததுடன் உருக்குலைந்தது. அப்போது வீசிய பலத்த காற்றால் பல மரங்கள் வேரோடு சாய்ந்தும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த புயலில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் பலியாகினர். Manasota Key உள்ளிட்ட பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்ட நிலையில், அங்கு சீரமைப்பு பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. செயின்ட் Petersburgல் உள்ள விளையாட்டு ஸ்டேடியத்தின் மேற்கூரை கடும் சேதமடைந்த நிலையில் உருகுலைந்து காணப்படுகிறது.