புளோரிடாவின் மேற்கு கடற்கரையில் உள்ள சரசோட்டா பகுதியில் மில்டன் சூறாவளியால், பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. மில்டன் சூறாவளியால் புளோரிடாவின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புளோரிடாவில் ஹெலன் புயல் தாக்கிய இரண்டு வாரங்கள் கழித்து மில்டன் புயல் தாக்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.