உத்தரபிரதேசம், பத்ராவா... கால்வாயில் கிடந்த மனித தலையை கவ்வி இழுத்து வந்த தெருநாய். துண்டாக கிடந்த தலையை பார்த்து அரண்டு போய் நின்ற மக்கள். வெவ்வேறு இடங்கலில் கிடந்த உடல் பாகங்கள். கையில் இருந்த டாட்டூவை வைத்து கொல்லப்பட்டவரின் அடையாளத்தை கண்டுபிடித்த போலீஸ். இளைஞரை பீஸ் பீஸாக வெட்டி கொலை செய்தது யார்? நடுநடுங்க வைக்கும் சம்பவத்தின் பகீர் பின்னணி என்ன?ரோட்டோர கால்வாய்கிட்ட நாய் ஒண்ணு, எதோ ஒரு பொருள கவ்வி ரோட்டுக்கு இழுத்துட்டு வந்துருக்கு. இந்த நாய்களோட ஒரே தொல்லையா போச்சு, சாக்கடையில உள்ளத ரோட்டுல இழுத்துட்டு வந்து போட்டுட்டே இருக்கு, இதுக்கு ஒரு முடிவு கட்டணும்னு சொல்லி முணுமுணுத்துக்கிட்டே நடந்து போய்ட்டு இருந்துருக்காங்க அந்த ஏரியா மக்கள். சாதாரணமா நடந்து போய்ட்டு இருந்த ஒருத்தரு நாய் கவ்விட்டு வந்த பொருள உத்து பாத்துருக்காரு. அப்பதான் தெரிஞ்சிருக்கு, அது ஏதோ ஒரு பொருள் இல்ல. யாரோ ஒருத்தரோட தலைன்னு. ஒரு தலை துண்டா கிடந்தத பாத்து, அங்க இருந்தவங்க அரண்டு போய்ட்டாங்க. தகவல் தெரிஞ்சு சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ், தனியா கிடந்த மனித தலைய கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வச்சாங்க. ஆனா, தலைய துண்டிச்சு கொடூரமா கொல்லப்பட்டது யாருங்குறத கண்டுபிடிக்க முடியாம போலீஸ் திணறிட்டு இருந்தாங்க. என்னடா இந்த கேஸ்ல எந்த துப்புமே கிடைக்க மாட்டேங்குதேனு போலீஸ் அலசி ஆராஞ்சிட்டு இருந்தாங்க. அப்ப, தலை ஒன்னு தனியா கிடந்த உத்தரபிரதேச மாநிலம் பத்ராவாவுல உள்ள இட்கா-ங்குற பகுதில வயிற்றுப்பகுதி ஒரு இடத்துல, வலது கை ஒரு இடத்துல, இடது கை ஒரு இடத்துலன்னு மொத்தம் 8 இடங்கள்ல உடல் பாகங்கள் கிடந்துருக்கு. அங்க அங்க தனித்தனியா கிடந்த உடல் பாகங்கள கைப்பற்றுன போலீஸ், எல்லாத்தையும் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பியிருக்காங்க. அப்பதான், போலீஸுக்கு கிடச்ச எல்லா உடல் பாகங்களும் ஒரே நபரோடதுங்குறது உறுதியாகியிருக்கு. ஒரு கையில இருந்த டாட்டூவ வச்சு, கொல்லப்பட்டிருக்குறது, பத்ராவா சேர்ந்த ராகுல்ங்குறத போலீஸ் கண்டுபிடிச்சிருக்காங்க. அதுக்கப்புறம் விசாரிச்சதுல, ஏற்கெனவே ராகுலோட மனைவி அவர காணும்னு, காவல் நிலையத்துல கம்ப்ளைண்ட் கொடுத்திருக்குறதும் தெரியவந்துருக்கு. ராகுல இப்படி கொடூரமா கொன்னது மட்டுமில்ல, உடல துண்டு துண்டா வெட்டி பல்வேறு இடங்கள்ள வீசுனது யாருனு கண்டுபிடிக்க, தீவிர புலன் விசாரணையில இறங்குனாங்க. முதற்கட்டமா, ராகுலோட உறவினர்கள்கிட்டையும், அக்கம்பக்கத்துல உள்ளவங்கக்கிட்டையும் விசாரிச்சதுல, ராகுலோட மனைவி ரூபிய பாக்க அடிக்கடி ரெண்டு ஆண்கள் வருவாங்கன்னும், அந்த ஆண்களுக்கும் ரூபிக்கும் இடையில தகாத உறவு இருந்ததாவும் சொல்லிருக்காங்க. அந்த கோணத்துலேயே விசாரணைய தொடங்குன போலீஸ், ராகுல் வீட்டுக்கு போய் மனைவி ரூபிக்கிட்ட விசாரணைய தொடங்குனாங்க.அப்போ, வீட்டுக்குள்ள இருந்த இரும்பு கம்பி, படுக்கை, ஹீட்டர்லலாம் உறைந்த ரத்த கறைகள் இருந்தத கவனிச்சிருக்காங்க. அந்த ரத்தக்கறைகள காட்டி ரூபிக்கிட்ட போலீஸ்காரங்க தீவிர விசாரணை பண்ணாங்க. அதுலதான், ராகுலுக்கு நடந்த உச்சகட்ட கொடூரமான விஷயங்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்து அதிர வச்சிருக்குது. ராகுல் - ரூபி தம்பதிக்கு 12 வயசுல ஒரு மகனும், 10 வயசுல ஒரு மகன்னு ரெண்டு மகன்கள் இருக்காங்க. இந்த சூழல, ரூபிக்கு அதே கிராமத்த சேர்ந்த கௌசிக், அபிஷேக்-ங்குற ரெண்டு பேரோட தகாத உறவு ஏற்பட்டிருக்குது. இந்த விஷயம் ராகுலுக்கு தெரிஞ்சு குடும்பத்துல பிரளயமே வெடிச்சிருக்கு. எவ்வளவோ கண்டிச்சும், ரூபி, கௌசிக் கூடவும், அபிஷேக் கூடவும் பேசுறத நிறுத்திக்கவே இல்ல. இதனால, தம்பதிக்குள்ள தெனமும் பிரச்சினை வந்து, விவாகரத்து வரைக்கும் போய்ருக்கு. ஆனா, மகன்களோட எதிர்காலம் பாதிக்கப்பட்டிரும்னு நினச்சு, விவாகரத்து முடிவுல இருந்து பின்வாங்கியிருக்காரு ராகுல். ஒருகட்டத்துல, விஷயம் வீட்டுல உள்ள பெரியவங்க காதுக்கு போய்ருக்கு. ராகுலோட அம்மா அப்பா, ரூபியோட அம்மா அப்பான்னு எல்லாரும் உக்காந்து இது சம்பந்தமா பேசியிருக்காங்க. பெரியவங்க வரைக்கும் விஷயம் தெரிஞ்சு பிரச்சினை பெருசானதுக்கு அப்புறம் ரூபி, கெளசிக், அபிஷேக்கூட பழகுறது கைவிட்டிருக்காங்க. மனைவி திருந்திட்டான்னு ராகுலும் நிம்மதியா இருந்துருக்காரு. இதுக்கு மத்தியில, மனைவி ரூபியோட செல்போன தற்செயலா பாத்திருக்காரு ராகுல். அப்பதான், ரூபி, கெளசிக்கூடவும், அபிஷேக்கூடவும் இப்ப வரைக்கு பேசிட்டு இருக்குறது தெரிஞ்சிருக்கு. உடனே மனைவிக்கிட்ட பயங்கரமா சண்ட போட்டிருக்காரு. இவர இப்படியே விட்டா நமக்கு பிரச்சினைன்னு நினச்சு, கெளசிக், அபிஷேக்கூட சேந்து கணவன போட்டுத்தள்ள முடிவு பண்ணிருக்காங்க ரூபி. அன்னைக்கு நைட் ராகுலுக்கு கொடுக்குற டீல, தூக்க மாத்திரய கலந்து கொடுத்திருக்காங்க.தூக்க மாத்திரை கலந்த டீய குடிச்சதும் ஆழ்ந்து தூங்கியிருக்காரு ராகுல். அப்ப, ரூபி, அபிஷேக், கெளசிக் மூணு பேரும் சேர்ந்து, ராகுல கத்தியாலேயே சரமாரியா குத்தி கொலை பண்ணிருக்காங்க. அதுக்கப்புறம், ராகுலோட உடல மறைக்க திட்டம் போட்ட மூணு பேரும், ராகுலோட உடல பீஸ் பீஸா வெட்டியிருக்காங்க. அதுக்கப்புறம், ராகுலோட துண்டு துண்டுகளா வெட்டி தனித்தனி பையில போட்டுருக்காங்க. அதுமட்டுமில்லாம, சில உடல் பாகங்கள கிரைண்டர்லையும், மிக்ஸிலையும் போட்டு அரைச்சு அத தண்ணில கரைச்சதுதான் கொடூரத்தோட உச்சமே. அதுக்குப்பிறகு, உடல் பாகங்கள் போட்ட பைகள ஒவ்வொரு இடத்துக்கு கொண்டு போய் வீசிட்டு கமுக்கமா இருந்துருக்காங்க. ரூபிக்கிட்ட நடத்துன விசாரணையில மொத்த உண்மையும் வெளிச்சத்துக்கு வந்துருக்குது. அடுத்து, ரூபியையும், அவங்களோட காதலர்களான கெளசிக், அபிஷேக் மூணு பேர் மேலையும் வழக்குப்பதிவு பண்ண போலீஸ், அவங்கள அரெஸ்ட் பண்ணி தொடர்ந்து விசாரணை நடத்திட்டு இருக்காங்க.