விண்வெளியில் இருந்து பார்த்த போது இந்தியா எப்படி இருந்தது? என்ற கேள்விக்கு "அற்புதம், மிகவும் அற்புதம்," "இந்தியா அற்புதமானது" என நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பதிலளித்துள்ளர். 286 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து கடந்த 19 ம் தேதியன்று பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவின் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார். இந்திய நிலப்பரப்பின் காட்சியால் மயங்கிப் போனதாக கூறிய சுனிதா வில்லியம்ஸ், மேற்கில் மீன்பிடிக் கடற்கரைகள் முதல் வடக்கில் உள்ள பிரமாண்டமான இமயமலை வரை, மிக அற்புதமாக இருந்ததாக கூறினார்.