2017 - 2021 காலகட்டத்தில், தாலிக்கு தங்கம் வழங்கும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் எவ்வளவு பேர் பயனடைந்தார்கள் என்ற விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, கடந்த 2017 முதல் 2021 வரை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண திட்டத்தின் கீழ் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர்? எத்தனை பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது? இத்திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கிய நிதி எவ்வளவு? என்ற விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.