சீமானின் ஆபாச பேச்சுகளை பொறுத்துக்கொண்டு அந்த கட்சியில் பெண்கள் எப்படித்தான் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பினார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் எழும்பூர் பயாஸ் மஹாலில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட கனிமொழி எம்.பி. நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதால் மாநிலத்தை மத்திய அரசு வஞ்சித்து வருவதாக குற்றம்சாட்டினார்.