ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பெய்த கனமழைக்கு சாலைகள் மற்றும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. குறிப்பாக விஜயவாடாவில் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் உணவு, குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்கள் கிடைக்காமல் அடித்து கொள்வதை காணமுடிந்தது. தற்போது மழை ஓய்ந்தும், சாலைகள் மற்றும் வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர் வடியாததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.