காசாவில் ஹமாஸ் அமைப்பினரால் இன்னும் பிடித்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுவிக்க அரசு உருப்படியான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பிணைக்கைதிகளின் உறவினர்கள் டெல் அவிவ் நகரில் பாலம் ஒன்றை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தங்கள் உடலை சங்கிலியால் கட்டிக் கொண்டும், தீ வைத்துக் கொண்டும் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச்சென்ற இஸ்ரேலியர்கள் 250 பேரில் சிலர் கொல்லப்பட்ட நிலையில், இன்னும் 100 பேர் பிணைக்கைதிகளாக உள்ளனர்.