சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது, மருத்துவமனை ஒன்றில் பச்சிளம் குழந்தைகள் வார்டு பயங்கரமாக குலுங்கியதன் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. யூனான் மாகாணத்தில் நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளை வைத்திருந்த சக்கர படுக்கைகள் கட்டுப்பாடின்றி இங்கும் அங்கும் உருண்டோட தொடங்கின. இதனை பார்த்த இரு செவிலியர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் குழந்தைகளை பாதுகாத்தனர்.