சீனாவில் ஹெபெய் மாகாணத்தில் காய்கறி சந்தையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக மளமளவென எரிந்த தீயை, தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளித்தது.