இஸ்ரேலுடன் நடந்த போரில் கொல்லப்பட்ட ராணுவ கமாண்டர்கள் உள்பட 60 பேருக்கு ஈரானில் அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடைபெற்றது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் உயிரிழந்த அணு விஞ்ஞானிகள் 14 பேருக்கும் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்பட்டது.டெஹ்ரானின் இஸ்லாமிய புரட்சி சதுக்கத்தில் திரண்ட மக்கள் உயிரிழந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இறுதி அஞ்சலியில் ஈரான் அதிபர் Masoud Pezeshkian மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கறுப்பு ஆடை அணிந்து ஈரானின் கொடிகளுடன் மக்கள் அஞ்சலி செலுத்துவதை அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியது.