ஹோண்டா ஷைன் 100, பைக்கின் புதிய வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஹோண்டா ஷைன் OBD 2 வெர்ஷனின் விலை 68 ஆயிரத்து 767 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹோண்டா ஷைன் 100 மாடலில் 98.98 சிசி, சிங்கில் சிலின்டர், ஏர் கூல்டு என்ஜின் மற்றும் ஃபியூவல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.