ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் மற்றும் நடிகை அனா டி அர்மாஸ் இடையே திருமணம் நடக்க இருப்பதாக பரவும் செய்தி தான்., வதந்தியாக கூட இருக்கலாம்... ஆனால், ஹாலிவுட் ஹாட் டாபிக் இது தான்..கடந்த ஜூலை மாதம், உறவை உறுதிப்படுத்திய இந்த ஜோடி, ஒரு "அசாதாரண" திருமணத்தை திட்டமிடுவதாக சொல்லப்படுவது, உண்மையிலேயே ஹாட்.அதாவது, ஸ்கை டைவிங் இல்லை என்றால், விண்வெளியில் திருமணம் செய்து கொள்வது பற்றி பரிசீலித்து வருவதாக, தகவல் பரவுகிறது. "இவர்கள் இருவரும், துணிச்சலான சாதனைகளை செய்ய விரும்புகிறவர்கள், அதனால், திருமணத்தையும் துணிச்சலாக செய்ய திட்டமிடுவதில் ஆச்சரியம் இல்லை" என்று, இவர்களது நட்பு வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆனால், முரட்டு சிங்கிள்ஸ் கவனிக்க வேண்டும், ஆடம்பரமான திருமணத்தை பற்றி அல்ல...சுமாராக 63 வயதான டாம் குரூஸ், 37 வயதான அனா டி அர்மாஸ் இடையே திருமணம் நடக்கப் போகிறது. விண்வெளிக்கு போனால், நேரில் வாழ்த்த முடியாது... எங்கிருந்தாலும் வாழ்க... என்று இங்கே இருந்தே வாழ்த்துவோம்...