கனமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று மூன்று மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளன. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.