இந்து மக்களால் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை கடும் பாதுகாப்புடன் பாகிஸ்தானிலும் கொண்டாடப்பட்டது. ஹோலி கொண்டாட்டத்தை முன்னிட்டு லாகூரிலுள்ள கிருஷ்ணர் கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டதுடன், பாரம்பரிய உணவுகளும் இனிப்புகளும் பக்தர்களுக்கு பரிமாறப்பட்டன.