கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் உள்ள இட ஒதுக்கீடு குறித்து தாம் தெரிவித்த கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். வாஷிங்டன் ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ராகுல் பேசும் போது இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதற்கு விளக்கம் அளித்துள்ள ராகுல் காந்தி, தாம் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவன் அல்ல எனவும், காங்கிரஸ் கட்சி அதை 50 சதவிகிதத்தை தாண்டி எடுத்துச் செல்லும் எனவும் தெரிவித்துள்ளார். இந்தியா ஒரு நல்ல நிலைக்கு, அதாவது வளர்ந்த நாடாக மாறிய பின்னர் இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவருவது பற்றி காங்கிரஸ் சிந்திக்கும் என தெரிவித்த அவர், இப்போது இந்தியாவில் அந்த சூழ்நிலை இல்லை எனவும் தெரிவித்தார்.