இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென ஓய்வு அறிவிக்க, அவமானம் ஒரு காரணமாக இருக்கலாம் என அவரது தந்தை கூறியிருந்த நிலையில், ஊடகம் முன்னிலையில் எப்படி பேசுவது என்று தனது தந்தைக்கு தெரியாது என அஸ்வின் தெரிவித்துள்ளார். இது தொடர்பான எக்ஸ் பதிவில், டேய் தகப்பா என்னடா இதெல்லாம் என்ற, கவுண்டமணி செந்தில் காமெடியை தொடர்புபடுத்தி கிண்டலடித்துள்ளார்.