நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு இந்தியா சார்பில் நிவாரண பொருட்களை அனுப்பும் பணி துவங்கி உள்ளது. இந்திய விமானப்படையின் C130J விமானம் 15 டன் நிவாரணப் பொருட்களுடன் விரைவில் மியான்மருக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கும் கூடாரங்கள், தலையணை, போர்வைகள், உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள், சூரிய விளக்குகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் அனுப்பப்பட உள்ளன.