தலைநகர் டெல்லியின் பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சாலைகளில் மழை வெள்ளம் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடியே சென்றனர். மழையின் போது பலத்த காற்று வீசியதால் ஆர்.கே.புரம் பகுதியில் உள்ள ஒரு மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.