மதுரை திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், மாலை நேரத்தில் திடீரென கனமழை கொட்டி தீர்த்தது. மதுரையில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளான விமான நிலையம், பெருங்குடி, அவனியாபுரம், திருநகர், பசுமலை உள்ளிட்ட பகுதிகளில் மாலையில் திடீரென கருமேகங்கள் திரண்டு கனமழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.