தமிழகத்தில் வரும் 20ம் தேதி வரை சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது. ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.