தமிழகத்தில் வரும் 15-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செவ்வாய் கிழமை ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதே போல் நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மட்டும் வரும் 13, 14 மற்றும் 15 ஆகிய 3 தேதிகளில் மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.