பெரு நாட்டில் பெய்த அதீத கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தலைநகர் லிமாவில் பல நகரங்கள் வெள்ளக்காடாய் மாறியுள்ள நிலையில், அங்கு குடியிருந்து வரும் மக்கள் மீட்கப்பட்டு சேவை மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். தெற்கு நகரமான நாஸ்காவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.