வடகிழக்கு மெக்சிகோவில் பெய்த கனமழையால் குடியிருப்புகள் நீரில் மூழ்கின. கடந்த 2 நாட்களாக ரெய்னோசா நகரத்தில் கன மழை கொட்டித்தீர்த்தது. இதனால் அந்நகரத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பியதால், குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. ஒரு சிலர் பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயர்ந்த நிலையில், வெள்ளத்தில் சிக்கித்தவித்த பலரை தன்னார்வலர்கள் சிறிய படகு மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.