ஜம்மு - காஷ்மீரில் மிகப்பெரிய மேக வெடிப்பு காரணமாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கால் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.தொடர்ந்து, 3வது நாளாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.தற்போது, தாவி ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கிறது. உஜ், பசந்தர், சாஹர் கந்த் ஆகிய ஆறுகளும் அபாய கட்டத்தை தாண்டியும், நெருங்கியும் ஓடிக் கொண்டிருக்கின்றன. மேலும், ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத மழை கொட்டி தீர்க்கப் போகிறது என்றும் இது 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை விட மோசமாக இருக்கும் என்றும் ஆர்வலர்கள் கணித்துள்ளனர்.